கவியும் சுவையும்
உண்மையான கவிதை, அருமையான திரவியம், அதனால் உலகம் ஷேமத்தை அடைகிறது. எந்த நாட்டிலே புதிய மஹாகவி தோன்றுகிறானோ அந்த நாடு மஹாபாக்யமுடையது”- (பாரதியார் கட்டுரைகள்:கவி) இது பாரதி வாக்கு.
பாரதிக்கு தன் கருத்தை வெளியிடும் கருவியாக (Medium) மட்டும் கவிதை இல்லை. அதுவே தன் தொழில் என்று ஒரு தெளிவான உறுதி இருந்திருக்கிறது.
நமக்கு தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்

இமைப் பொழுதும் சேராதிருத்தல் (விநாயகா் நான்மணி மாலை)
நல்ல கவிதையை ரசிப்பதில் பாரதிக்குக் கூா்மையான அறிவு உண்டு.
நல்ல கவிதையை ரசிப்பது அவருக்கு ஒரு பொழுது போக்கு அல்ல. அது ஒரு தவசித்தி . தன் நாட்டையும் மொழியையும் புரிந்து கொள்ள உதவும் உள்காட்சி .
அதனாலேயே அவா்-
சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன்றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்பு தான் தமிழ்ச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதி கொண்டிருந்தேன் (தமிழச்சாதி)
ஒரு மொழியின் வாழ்வில் ஒா் இனத்தின் வாழ்வு அடங்குகிறது திருப்பிக்கூடச் சொல்லலாம். இனத்தின் வாழ்வு மொழியின் வாழ்வில் இடம் பெற்றிருக்கிறது.
ஒரு மொழி பேசுவோரிடையே அன்றாடப் பயன்பாட்டிற்கு உரிய பல பழகு சொற்கள். கைக்கு வந்து போகும் காசுகளையும் நோட்டுக்களையும் போல வந்து போகலாம்.
கஜானா, சா்க்கார், சமஸ்தானம், துறை,நெறி பள்ளி, ஐம்பெருங்குழு, பேராயம், வாரியம், கருவாடு, என்று பற்பல சொற்களை நாம் அன்றாடம் வெவ்வேறு சந்தா்ப்பங்களில் பயன்படுத்துகிறோம்.
இவை நம் இனமும் மொழியும் கடந்து வந்திருக்கிற கால கட்டங்களின் சின்னங்களைப் பெற்ற சொற்கள், முகலாயா் ஆட்சி, நாயக்கர் ஆட்சி, புத்த சமண மதப் பாதிப்பு, கடைச்சங்க காலம். ஆற்றங்கரை நாகரிகம் எனப் பல்வேறு காலபட்டங்களில் உதித்த சொற்கள் அவை.
அவற்றிரற்கு செலாவணி மதிப்பு தவிர வேறு சிறப்பில்லை.
ஆனால் அந்தந்தக் காலகட்டங்களில் பல அரிய கவிதைகள் பிறந்திருக்கின்றன. அற்புதக்காவியங்கள் தோன்றியுள்ளன்.
காலம் மாறிவிட்டது என்று கூறுவதைவிட மாறிக்கொண்டே வருகிறது என்று சொல்வது பொருத்தம்.. அன்று வாழ்ந்த மாந்தர்கள், மன்னர்கள் , குடிமக்கள்,கலைஞர்கள், கவிஞர்கள் மறைந்துவிட்டனர். எனினும் அவர்கள் கையாண்ட சொற்கள் வாழ்க்கையோட்டத்தில்சா ஒன்றறக் கலந்து பழகு சொற்களாகி கருத்துக் கருவியாக (tools of concept) இன்றும் பயன்படுகின்றன.
அவர்கள் எழுதிய கவிதையோ காலத்தினால் பத்திரமாக இந்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
நமது நாகரிகம் எட்டிய உயரம். மனித குல வாழ்வில் நமது நடைப்பயணம். அவர்கள் செய்த கவிதையிலே மிஞ்சி நிற்கிறது.
நம்மை இன்னார் என்று அது நமக்கு அடையாளம் காட்டுகிறது.
நம் சொத்து என்ன? நம் மதிப்பு என்ன? நமது பாதை எது? இதை நமக்கு உணர்த்தி அக்கவிதைகள் ஓர்ர் உடைமை (belongingness) உணா்வை அளிக்கின்றன.
இந்த முக்கிய பாத்திரம் (role) கவிதைக்கு இருப்பதாலேயே பாரதி கவிதையை மகத்தான ஆற்றல் கொண்ட பொருளாகக் கருதினார்.
நமது ‘கவிதைத் தலைவி்’ என்ற கவிதையில் கவிதையின் பெருமை கூறும்போது
தினமும் இவ்வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளி லாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளா்பல
முட்கள்போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்
வெறுங்கதைத் திரளை………………………
தனிப்பதா்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அறுபவ மாக்கி, உயிரிலாச் செய்திகட்கு உயிர் மிகக் கொடுத்து
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை
இணைக்கும்
பேதை மாசக்தியின் பெண்ணே! வாழ்க!
என்று தாம் உணா்ந்ததை வெளிப்படுத்தினா்.
கவிதை பாரதிக்கு தொழில். அது அவர் மனைத் தலைவி. அவரது காதலி, அவருக்கு தெய்வமும் கூட.
...நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னனாய பேணி நெடுநாள் போக்கினேன் (கவிதைக் காதலி)
தமது தாய் நாட்டைப்பற்றி வாழ்த்திப் பாடும் போதும் கூட
கானகத்தில் அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர்ந்த நாடு - (பாரதி நாடு)
என்று கூறி நாட்டை வாழ்த்தகிறார்.
மீண்டும் வெறிகொண்ட தாய் பாடலில்
தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் குடி ---- மதுத்
தேக்கி நடிப்பாள் எம் அன்னை, என்கிறார்.
கவிதை அவருக்கு மயக்கம் தந்தது.
மனத்திலே நெருப்பு தந்தது.
அவர் உயிர் நிலவி உலவ தளம் தந்தது.
அவரது மனம் பறந்து திரியப்பெரிய வான்விரிவு தந்தது.
கள்ளையும் தீமையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வானவெளியையும் சோ்த்துத்
தெள்ளுதமிழ்ப் புலவோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து வைத்தார்
எனது தம்ம முன்னோர் செய்து தந்த கவிச்சுவை தருகையில் தம் மரபு பற்றி பாரதிக்கு அசைக்க முடியாத தெளிவும் உறுதியும் உண்டு. கவி மரபை. கவிதையின் வடிவ மரபைப் பல இடங்களில் பாரதி தகா்த்திருந்த போதும்.
சிந்தனை மரபு, உள்ள நல்லதைப் போற்றும ரசனை மரபு இவற்றைத் தெளிந்த விழிப்புணா்வோடு அவர் உணா்ந்திருந்தார்.
அதை நேரடியாகவும். தன் உணா்வு மூலமாகவும் தமிழருக்கு வற்புறுத்தி வந்தார்.
கம்பா் திருவள்ளுவா், இளங்கோவடிகள் ஆகிய மூவரும் தமிழன் அழியாத அருநிதியம் என்பதை அவா் அறிவு புரிந்து கொண்டது.
ஒன்றுக்கு மேல் ஒன்றாக மும்முறை அவா் அந்த உணா்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு…
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்- மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்நாடு)
என்றும்
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்’
………………………………….
…………………………………
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் - (சுயசரிதை) என்றும் திரும்பத்திரும்பச் சொல்லி வியந்து போகிறார்.
அந்த மூன்று கவிஞா்களும் தமிழ்மொழியின் உயிர்நாடி. தமிழ்மக்களின் இதய நாதம் என்றும் அவரது கவிதா சக்தி புரிந்து கொண்டு அவர்களைப் படியுங்கள் என்று சொல்லாமற் சொல்லவைத்திருக்கிறது .
பாரதிக்கு கவிதை கொண்டு உலகையே காப்பாற்றி விட முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்திருக்கிறது.
பாட்டுத் திறத்தாலே---- இவ் வையத்தைப்
பாலித்திட வேணும் (காணிநிலம்)
என்று பராசக்தியிடம் கேட்கத் தோன்றுகிறது.
கலைமகளை வாழ்த்திப் பாடும்போது கூட
கொள்கை யின்பம் குலவு கவிதை
கூறு நாவலர் உள்ளத் திருப்பாள் (வெள்ளைத் தாமரை)
என்று கலைமகள் எங்கே வசிக்கிறாள் என்று முகவரி சொல்கிறார்.
தமது கவிதை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றிற்குக் கடந்து செல்லும் வலிமையுடையது. அதன் ஒளி என்றும் குன்றாது,குறையாது என்று அவருக்குப் புரிந்திருந்தது.
“சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது,
சொற்புதிது சோதி மிக்க
நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை”(வெங்கடேசு ரெட்டப்ப பூபதி)
என்ற திடமான தெளிவு அவருக்கு உண்டு.
பாரதி தமிழனுக்கு விடுத்த செய்தியில் நல்ல கவிதையைத் தேர்ந்தெடுத்துப்படி என்பது மிகவும் முக்கியமானது.
ரஸத்திலே தேர்ச்சி கொள் (புதிய ஆத்திச் சூடி) என்றுதான் அவர் தமிழனுக்கு அறிவுரை கூறுகிறார்.
கவிதையும் பாட்டும் பாரதிக்கு இயற்கையிலே பெரிய விந்தைகளாகத் தோன்றுகின்றன.
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டுநெடு வானம் கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! (குயில்பாட்டு) என்றார்.
தமிழரின் வாழ்வு நிலைப்பதும், நீடிப்பதும் வளம் பெறுவதும் வலிமை உறுவதும் நல்ல கவிதைகளைப் படிப்பதிலே, அவற்றை நெஞ்சில் இருத்துவதிலே உள்ளது என்பது பாரதியின் உளக்குறிப்பு.
நல்ல கவியுணர்வு ஒருவனை கூர்மையுள்ளவனாக்குகிறது. மென்மை உணர்வுகளை உருவாக்குகிறது. அவனை மனித மாண்பு பெற வைக்கிறது என்ற நடைமுறை உண்மைகளை நல்ல பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம்முள் வந்து பரவும் எழுச்சியிலே பலமுறை உணர்ந்திருக்கிறோம். கவியுணர்வுக்கு இலக்கணம் இடையூறு என்பதைக் கூர்ந்து அறிந்திருந்தார்.
“பிறா் துன்பத்தைக் காணும்போது தனது துன்பம் போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும், பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப் பழகுவாராயின் முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்; பிந்தியவன் பதங்களைப் பின்னுவான்; இவனுடைய தொழிலிலே கவிதை இராது. இப்படியே தான் ஒவ்வொன்றிலும்.
(பாரதியார் கட்டுரை: சங்கீத விஷயம்)
நல்ல கவிதை எழுதுவதற்கே சில அடிப்படைத் தகுதிகள் வேண்டுமென்று அவா் கருதுவது கவியுணா்வின் வார்ப்புப் பெருமையைப் புலப்படுத்துகிறது.
கவிதையின் தரம் குன்றி தப்பும் தவறும் சப்பும் சவறும் அதில் சேர்வதைப் பாரதியால் சகிக்க முடியாது.
ஒரு தலைமுறையின் வீழ்ச்சியிலேதான் அத்தகைய கவிதைகள் தோன்றும் என்பது அவரது உட்கிடக்கை அதற்கு அவரே ஓர் எடுதுதுக்காட்டு சொல்கிறார்.
“மலைப்பாம்புக் கதை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? அதன் வாலிலே தீப்பற்றி எரியுமாம். மலைப் பாம்பு சுகமாக குறட்டைவிட்டுத் தூங்குமாம்”
(கட்டுரைகள் : ஆர்ய ஸம்பத்து)
இடைக் காலத்தில் நமது கவிதை வீழ்ச்சியை அவர் இப்படி விவரித்துவிட்டு மேலும் சாரசாரமாகக் கூறுகிறார்.
“செல்லரித்துக் கொண்டு போனது நமது ஸ்மரணையிலே தட்டவில்லை“
அப்படி தட்டாமற்போனதற்கு பாரதி கூறும் காரணம் என்ன?
“அத்தனை கர்வம், அத்தனை கொழுப்பு, அத்தனை சோம்பல்“
பாரதிக்கு முந்திய ஒரு காலகட்டத்தில் தமிழ்க் கவிதைக்கு நேர்ந்த வீழ்ச்சி எத்தகையது என்று அவர் குறிப்பாகச் சொல்கிறார்.
“நமது கவிதையிலே ஆனந்தம் குறைய தொடங்கிற்று! ருசி குறைந்தது . கரடுமுரடான கல்லும் கள்ளி முள்ளும் போன்ற பாதை தமது கவிகளுக்கு நல்ல பாதையாகத் தோன்றிற்று...”
பாரதி அடுக்கடுக்காக மேலும் விளக்குகிறார்.
“ரஸம் குறைந்தது ;
சக்கை அதிகப்பட்டது.
உண்மை குறைந்தது ;
பின்னல் திறமைகள் அதிகப்பட்டன“
நல்ல கவிதை எப்படியிருக்க வேண்டும்மென்பதற்கு கம்பனிடமிருந்து ஒரு மேற்கோளை ஆதாரம் காட்டுகிறார் பாரதி.
“சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.
கவிதைகளில் ஒளி, தெளிவு குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டுமென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை“ என்று பாரதி ஏற்கிறார்.
கவிதையில் புழங்கும் மொழியும் சொல்லும் எப்படி இருக்க வேண்டும் என்பதில் தெள்ளத் தெளிவான ஒரு தீர்மானம் பாரதிக்கு இருந்தது.
“காலம் மாற மாற, பாஷை மாறிக் கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக் கூடிய பதங்களையே வழங்க வேண்டும்.
“அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை.
“ஆனால் சென்ற சில நூற்றாண்டுகளாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகு ஸாதாரண விஷயங்களை அஸாதாரண, அலௌகீக, அந்தகார நடையில் எழுதுவதுதான் உயர்ந்த கவ்வித் திறமை என்று தீருமானஞ் செய்து கொண்டார்கள்.
மேற்படி கட்டுரை தமிழுக்கு நேர்ந்த விபத்தை சொல்லும் பொழுது,
“செத்துப் பிழைத்தோம், ஆனால் உறுதியாக நல்லவயிரம் போலே பிழைத்து விட்டோம், புதிய ஜன்மம் நமக்கு மிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள் புரிந்திருக்கிறார்கள். அதன் பொருட்டு அவர்களை இடைவிடாமல் வாழ்த்துகிறோம்“
பாரதி என்றுமே நம்பிக்கை இழப்பவர் அல்ல, நம்பிக்கையின் சிம்மநாதம் அவர் குரல்.
“தமிழ்நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலே தோன்றும். உலகம் பார்த்து வியப்படையும்“ என்று வாக்களிக்கிறார்.

No comments:
Post a Comment