பாரதியின் மனோவிசாலம்
அந்த மனிதன் பிறந்து இந்தியாவின் தென் கோடி மூலையில், நூற்றுக்கணக்காகச் சிதறுண்டிருந்த குட்டி சமஸ்தானங்களில் ஒன்றான எட்டயபுரத்தில், அவ்வூரின் சிறுபான்மை சமூகமான பிராமணர் குலத்தில். ஓர் ஓட்டு வீட்டில், அங்கு தான் அந்த மனிதன் பிறந்தான்.
முறையான பள்ளிப் படிப்போ பத்தாவது கூட இல்லை, உடலோ மிகவும் பூஞ்சை.
அவன் உலக நாடுகளை சுற்றிப்பார்த்தவன் அல்ல, கடல் கடந்தவனே அல்ல, மிச்ச மிச்சமாக அவன் போக முடிந்தது வடக்கே காசி வரையில்.
அவன் உலவித்திரிந்து அனுபவங்களை நுகர்ந்த ஒரே ஒரு பெருநகரம் சென்னை மட்டுமே. மீதி இடங்கள் அந்த அளவிற்குக் கூட அனுபவ விரிவு கிடைக்க முடியாத நகரங்கள், திருநெல்வேலி, மதுரை, புதுச்சேரி, காசி இப்படி.
வாழ்வின் அந்திமகாலம் வரை அவன் அனுபவித்தது வறுமை மட்டுமே, செய்த தொழிலோ கொஞ்சகாலம் சமஸ்தானப் புலவர், கொஞ்சகாலம் தமிழாசிரியர், கொஞ்ச காலம் பத்திரிக்கையாளர். சொந்த நூல்களையும் வெளியிடப் பணவசதியற்ற பதிப்பாளர்.
பெரும்பாலான காலம், புத்தகங்களோ பத்திரிக்கையோ மிகவும் சிறு அளவில் விற்பனையான ஒரு காலத்தில் தமிழில் வெறும் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த சுயேச்சைக் கவிஞன், எழுத்தாளன்.
வாழ்ந்த காலமோ பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு அஞ்சி, எந்த சிறுமையையும் சகித்து ஏற்று உயிர் பிழைத்தால் போதும் என்ற மனோபாவமுள்ளோர் பெரும்பான்மையோராக இருந்த காலம்.
நண்பர்களோ கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை, அராஜகவாதியென வங்காளத்தில் முத்திரைக் குத்தப்பட்டு அரசியல் புகலிடத்திற்காக புதுச்சேரி வந்த அரவிந்தகோஷ். இருவர் தவிரப் பெரும் புகழ் பெற்றோர் எவருமில்லை.
மற்றவர்களில் பலர் எளியவர்கள். சிலர் புரட்சிக்காரர்கள், அவர்களில் வ.வெ.சு ஐயர் ஒருவர் தவிர வேறெவரும் கடல் கடந்து அன்னிய நாடுகளைச் சென்று அறியாதவர்கள். அவருக்கு விவேகானந்தருக்கு இராமகிருஷ்ணரைப் போன்று முறையான குரு என்று எவரும் இல்லை. உயிர் வாழ்ந்த காலமோ வெறும் 39 ஆண்டுகள்.
இப்படி எல்லா வகையிலும் அந்த மனிதரின் விதி அவருக்கு எதிராக இருந்தது. மனித உள்ளம் விரிவடைவதற்குப் பௌதீகத் தேவையான புறக்காரணங்கள் என்று எவற்றையெல்லாம் நாகரீக உலகம் வற்புறுத்துகின்றதோ அவற்றில் பெரும்பாலானவை அவருக்குக் கிடைக்கவில்லை.
அவரை தேசவிடுதலை இயக்கம் உருவாக்கியது என்று முழு உரிமை கொண்டாடுவதற்கில்லை. அந்த இயக்கத்தின் வரையறைகளை அவர் பரந்துபட்ட அளவில் கடந்திருந்தார்.
அவர் உலகு தழுவிய மனித விடுதலையை, அதற்கு மேலே சென்று பஞ்ச பூதங்களின் கட்டமைப்பை நொறுக்கிய ஆன்மீக விடுதலையை அவர் கவிதைகள் பாடின.
அவர் ஒரு இயக்கமாயிருந்தார். ஒரு மொழியின் இயக்கம் என்ற எல்லையை மீறி மானுட சிந்தனையின் இயக்கம் என்று விரிவடைந்தார்
இத்தனைக்கும் அவர் வேலை, வெறும் பேனாவால் நடந்த வேலை. அவர் செய்ததெல்லாம் கவிதை, கதை கட்டுரை என்ற முயற்சிகள் தான்.
தமது தாய்மொழி குறித்து என்னதான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் கணோம்” என்று அவர் அடித்துச் சொன்ன போதிலும், தமிழிலேயே பேசுவேன் தமிழிலேயே எழுதுவேன் என்று அசைக்க முடியாத மொழிப்பற்றோடு அவர் முரசறைந்த போதிலும், அவர் ஒரு மொழிக்கு மட்டுமே சொந்தமென்ற நிலையை மகத்தான் முறையில் கடந்து நின்றார்.
இதற்கு வலிந்து புறச்சான்று தேடத் தேவையில்லை, அவரது நூற்றாண்டு விழா போதும்.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நமது மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாஸ்கோ, பாரீஸ், இலண்டன், நியூயார்க், இப்படி ஒரு பட்டியல் போடலாம், எல்லா உலக நாடுகளின் பல முக்கிய நகரங்களில் பாரதிக்கு நூற்றாண்டு விழா நடந்தது.
இங்கெல்லாம் குடியிருக்கிற தமிழர்களின் திட்டமிட்டு முனைந்து நமது அருமந்தச் செல்வமான பாரதியின் விழாவைக் கொண்டாடியே தீர்க்க வேண்டுமென்ற ஆவேசத்தின் விளைவே இவ்விழாக்கள் என்றே கூட வைத்துக்கொள்வோம்.
எங்கே பாரதி கொண்டாடப்படுகிறானோ அந்த இடத்துக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தத்தைக் கருதி அந்தத் தமிழர்கள் இத்தகைய விழாக்களை ஏற்பாடு செய்ய முடியும்?
அது மாஸ்கோவோ, பாரிஸோ, கல்கத்தாவோ, ஜெய்ப்பூரோ, அன்றி உலகின்கு எந்த மூலையிலோ உள்ள குக்கிராமமோ மாநகரமோ எதுவானால் என்ன?
எந்தெந்த இடங்களில் மனிதன் வசிக்கிறானோ எங்கே உயிர்கள் உயிர்மூச்சு விட்டுத்துடித்து இயங்கி, இன்புற்றுக் குலாவி மகிழ்ந்து, துன்பத்தோடு சமர் செய்து, கொடுங்கோன்மைக்கு எதிரே கொடி பிடித்து எந்தச் சிமிழ் தன்னை அடைத்து வைக்கிறதோ, அதனை உதைத்துத் திறந்து கொண்டு போராடி விடுதலைக்கு முயல்கின்றதோ, அங்கெல்லாம் பாரதிக்கு ஏற்கெனவே ஓர் உறவு உண்டு. அவற்றோடு மனித நேயமும் ஆழ்ந்த பற்றும் உண்டு.
இந்த பகைப்புலம் தான் புவியெங்கும் சிதறியுள்ள தமிழ்கூறும் நல்லுலகிற்கு தாங்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் நமது மகாகவியின் நூற்றாண்டைக் ண்டைக் கொண்டாட ஒரு தார்மீக பலத்தை அளித்திருக்கிறது. எல்லைகளைக் கடக்க வைத்திருக்கிறது.
பாரதி ஒருவனைத் தவிர வேறு எவருக்கு இவ்வளவு ஏகோபித்த மனத்தீயுடன் உலகெல்லாம் ஒரு மக்கள் விழாக் கொண்டாட முடியும்?
அது ஏன் எப்படி சாத்தியமானது?
சுருக்கமான விடை -
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தொடங்கும் ஒரு நாகரிகத்தின் சிந்தனைக்களத்தில் ஆழ்ந்து வேரோடிய ஒரு பெரு மரம் தான் பாரதி.
எல்லாம் நம் ஊர்கள் தான்; எல்லோரும் நம் உறவினர்கள் தான் என்று சித்தம் உறிஞ்சிய சத்து விரிவாக்கித் தந்த விளைச்சலால் கிட்டிய எல்லையொன்றின்மை என்ற திகட்டாத் தீஞ்சுவைக் கனிதான், பாரதி உலகிற்கு வழங்கிய மனவிகாசம்.
சாதி, மதம், இனம், மொழி, நாடு, வர்க்கம் என்று நூறு கூறுகளாக மனித குலம் சின்னாபின்னமாகிச்சி தறுண்டு சின்னச் சின்னத் துண்டுகளாகி, அப்படிக் குறுகிவிடுவதாலேயே ஒரு பாதுகாப்பு இருப்பதாக துரதிர்ஷ்டவசமாக நம்பி, முரண்பட்டுப் போர் செய்து ஒன்றையொன்று அழித்துவிடுவதனால்தான் நாம் நிலை நிற்கமுடியும் என்ற பரிதாபமான அறியாமையில் எப்போதும் போல மூழ்கியிருக்கின்ற இந்தக் காலத்திற்கு எப்போதையும் விடப் பெரிய அளவில் அதன் தேவை இருப்பதைத்தான் அவர் நூற்றாண்டு விழா நமக்கு உணர்த்தி இருக்கிறது.
அவனது விழா எவ்வாறு எல்லைகளைக் கடந்ததோ அதைவிடப் பன்மடங்கு பேரளவில் அவன் மனம் எல்லைகளைக் கடந்திருக்கிறது. எல்லையொன்றின்மை என்ற சொற் புழக்கமே (Coinage) பாரதி பிரபலமாகியது.
“எல்லையொன்றின்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் பாட்டிட முயலும்...” என்ற வரிகள் புலப்படுத்தும்.
ஒரு ஞானப்பாடலாகத் தோற்றமளிக்கும் “நான்“ பாடல் அமானுஷ்யக் குறியீடுகள் (Mystic Symbols) கொண்டது.
வானில் பறக்கும் புள், மண்ணில் திரியும் விலங்கு, கானில் வளரும் மரம், காற்று, புனல் , கடல், விண்மீன், புழு, உயிர் என்ற ஒவ்வொரு பொருளிலும் தான் இருப்பதாக அடையாளம் கண்டு கொண்டே வந்த பாரதி குறிப்பிட்ட ஒரு கவியின் பெயர் சொல்லி ஒரு சொற்றொடர் இசைக்கிறான்.
அந்தப் பாடலில் அந்த ஒரு பெயர் தவிர வேறு பெயர்கள் அல்லது பொருள்கள் திட்டவட்டமாக குறிக்கப்படவில்லை.
“கம்பனிசைத்த கவியெலாம் நான்”
இப்படி இரண்டு முறை கம்பன் பெயரைக் குறிப்பிடும்பொழுது எல்லையொன்றின்மை என்ற ஞானம் கவிச் சக்கரவர்த்தியின் வாயிலாக பாரதியை எட்டியிருக்கிறது என்பது நமக்கு ஊர்ஜிதமாகிறது.
மனிதகுலம் மட்டுமின்றி சகல உயிர்க்குலத்தையும், மேலே சென்ற பிரபஞ்சம் காலம் விண்வெளி என்ற பிரம்மாண்டமான அளவுகளையும் தழுவி அணைக்கின்ற அவனது மனோ விசாலத்தை, ஏதோ, நாம் தமிழராய்ப் பிறந்திருப்பதற்காக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
நம்மிடையே அவன் மகாகவியா இல்லையா...? உலக மகா கவிகளுள் ஒருவனா இல்லையா என்ற தடுமாற்றம் நிலவி வந்ததுண்டு . ஆனால் ஹோமர், தாந்தே, கதே, புஷ்கின், ஷேக்ஸ்பியர், மில்டன், உமர்கய்யாம், விட்மன் என்ற எந்த உலக மகாகவிகளும் தொட்டிராத உணர்வுகளின், சத்தியத்தின் உச்சத்தை பாரதி தொட்டிருக்கிறான் என்ற உண்மையை சரியாக உணராத உணர்ந்தாலும் ஏற்காதவர்களால் வந்த தடுமாற்றம் அது. .
அவன் உலக மகாகவியல்ல, அதற்கும் மேலே அவன் அண்டப் பிரபஞ்சங்களின் மகாகவி. எவன் கவியோ, எவனது கவித்துவம் மொழி, இனம், நாடு, கண்டம், உலகம், உயிர்த்துவம், சடத்துவம், விண்வெளி, காலம் என்ற எல்லாவற்றையும் நேசித்து எதிலும் பந்தமுறாமல் அந்தந்த எல்லைகளைக் கிழித்துக் கொண்டு சகலத்திற்கும் தன் அன்பை வழங்கியவாறு நடந்து செல்கிறதோ...!
கவிதை என்ற தொழில் ஏற்பட்டதன் உத்தம நோக்கம் எதுவோ அதுதான் அவன்.
அது தான் நம் பாரதி.
அவன் தாய்மொழி உணர்வு பெற்றிருந்தான் தாய் நாடு என்ற தவிர்க்கவியலாத காதல் கொண்டிருந்தான். இவை அவனுக்கு எல்லைகள் அல்ல; வேர்கள்.
மரத்தின் எல்லை கிளைகளில் இல்லை. பிரதேச எல்லைகளைப் பெயர் சொல்லிக் கடந்து அறிந்திராத தமிழ்மொழியில் எங்கள் பாரத நாடு என்ற புதிய எல்லையை முதலில் சிருஷ்டித்தவன் பாரதி.
நம் அன்னையர் கன்னியராகி நிலவினிலாடி இன்னுயிர் தந்து நம்மை ஈன்று வளர்த்த கதை நடந்த நாடு நமது பாரத நாடு என்று தமிழில் முதலில் சொன்னவன் பாரதி.
சிந்துநதியின் மிசை தோணியில் அவன் சிந்தனை செய்த யாத்திரையும், மன்னும் இமயமலை எங்கள் மலையென்று அவன் வந்தனை செய்த மாட்சிமையும் நொறுங்கித் தகர்ந்த தமிழின் எல்லைகள்.
அவன் எந்த எல்லைகளுக்கும் கட்டுப்படாது 'வேண்டுமடி எப்போதும் விடுதலை' என்று விரும்பியவன். அதே சமயம் வேறு எந்த நாடு எங்கே மண்டையை உடைத்துக்கொண்டு மாண்டாலும் கவலையில்லை, என் பாரத தேசம் எனக்குப் போதும் என்று ஒதுங்கியவன் அல்ல.
பெ ல்ஜியம் தோற்றால் அவனது கவியுளம் பதைத்தது. யுகசூரியன் போன்று ரஷ்யாவில் புரட்சி உதித்தால் அவன் மனவிசாலம் ஆர்ப்பரி த்தது.
இமயமல வீழ்ந்த்து போல் வீழ்ந்துவிட்டான்
ஜார ரசன் இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்
அடிமைக்குத் தளை யில்லை யாமிப்போது
அடிமையில்லை அறிக.
என்பது இத்தாலியின் ஐக்கியத்திற்கு மாஜினி செய்த புரட்சி, ஏதோ இவன் செய்கிற புரட்சி போன்று சபதம் செய்ய வைத்து.
எல்லா உலக இயக்கங்களையும் தன் தாய்நாட்டு விடுதலை ஆர்வத்தை வெளியிடும் உருவகமாகவே அவன் கற்பித்துக்கொண்டான்.
ஆனால் சொந்த நாட்டின் துயர்களைப் பிறநாட்டின் துயர்களோடு அடையாளம் காணக்கூடிய மன விரிவு, பிறநாட்டின் வெற்றி தோல்விகளால் பாதித்த உணர்ச்சிப் பெருக்கு இவையெல்லாம் நமது மகாகவியின் எல்லையொன்றின்மை என்ற விசேஷ முத்திரைகள்.
பாரதியின் கவிதை சத்ரபதி சிவாஜயாகித் தன் சைனியத்துடன் பேசியதுண்டு. கள்ளர் பயமிருக்கும் காட்டு வழிதனில் வண்டியோட்டிச் செல்கையில்,
“நிறுத்து வண்டியென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே”
என்ன செய்வது என்று வண்டிக்காரனின் கவலையாகவும் மாறியதுண்டு.
“மண்வெட்டிக் கூலிதின்ன லாச்சே! எங்கள் வாள் வலியும் வேல் வலியும் போச்சே“
என்று நிலைதாழ்ந்து போன போர் மறவனின் துயர்களைப் பங்கிட்டுக் கொண்டதுண்டு.
’பூ மண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க’ என்ற ’ஸர்வேஜனா சுகினோ பவந்து’ என உலக சமாதானத்திற்குக் குரல் கொடுத்த்து முண்டு.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுவீரே
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே
என்று வியர்வைத் துளிகளின் வெற்றியை வாழ்த்தி வரவேற்றது முண்டு.
செம்புக்கும் கொம்பும் அஞ்சி-மக்கள்
சிற்றடிமைப் படலாமோ
என்று வீரவுரை ஆற்றியது முண்டு.
பாரதியின் கவிப் பொருள் எந்த எல்லைக்குள்ளும் சிக்காதது. குடுகுடுப்பாண்டி, பண்டாரம், அம்மாக் கண்ணு என்று சாமான்ய மனிதர் முதல் வேல்ஸ் இளவரசர் வரை அது பாகுபாடின்றி விரிந்தது.
தெய்வங்களைத் தோழன், சேவகன், சீடன், காதலி என்று இந்திய பக்திச்சிந்தனையின் எல்லைகளை நொறுக்கி புதிய உறவு முறைகளில் தெய்வத் தன்மையை தரிசிக்கும் துணிச்சல் பாரதிக்கு இருந்தது.
எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சியில் பெண் விடுதலைக்கு பாரதி உயர்த்திய போர்க் கொடியை இந்திய இலக்கியத்தில் அதற்கு முன்னும் ஏன் இன்றும் கூட அவ்வளவு உணர்ச்சிக் கொதிப்புடன் ஏந்திப் பிடித்தவர் உண்டா என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கும் பாரதி பாட்டு சொன்னான். யோகி, போகி, ஞானி என்ற மூவகை மனப் போக்கினரின் வாழ்க்கை நெறியையும் பாட்டுக்களாக்கினான்.
“தேசுறு விவேகானந்தப் பெருஞ்சாதி” என்று விவேகானந்தரை நினைத்து மெய் சிலிர்த்தான்.
சிறிய திட்டையிலே-உளதோர் தென்னஞ் சிறு தோப்பு வறியவனுடைமை-அதனை வாயு பொடிக்கவில்லை என்று புயலில் தப்பிய ஓர் ஏழையின் சிறிய தென்னந் தோப்பிற்கு மகிழ்ந்த மிருக்கிறான்.
ஊழிக்கூத்து கவிதையில் பாரதி எட்டிய சிகரங்கள் உலக்க் கவிதையில் கற்பனை எட்டிய உச்ச கட்டங்கள் தானே!
ஐந்துரு பூதம் சிந்திப் போயொன்றாகப் பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக
என்று எண்ணத்தின் எல்லைகளை தகர்க்கும் முயற்சி.
எத் திக்கினிலும் நின்விழியனல் போய் எட்டித் தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்-என்ற வரிகளிலும் பாழாம் வெளியும் பதறிப்போய் மெய் குலையச் சலனம் பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய,
யுக முடிவிற்கு அப்பால் நின்றும் கற்பனையின் அனுமான வேகத்தில் அவன் காட்டிய பேராற்றல் பிரபஞ்சம் முழுமையும் தழுவும்போது-
காயிலே புளிப்பதென்னே, கனியிலே இனிப்பதென்னே, சேற்றிலே குழம்பலென்னே, திக்கிலே தெளிந்த தென்னே என்று இயற்கையின் மாறுபாட்டு அமைப்புகளில் எந்தக் குழப்பமுமின்றி நீந்தித் தெளிவு பெறும் போது -
காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
என்று உலக இலக்கிய ஏடுகளில் கண்டறிய முடியாத ஓர் அபேத பாவத்தை எட்டும் போதும் எல்லையொன்றின்மை என்றால் என்னவென்று பாரதி நிரூபிக்கிறான்.
ஈசன், ஏசு, அல்லா, குருகோவிந்தசிங், புத்தர் என சகல மதங்களையும்சம திருஷ்டியில் காண்கின்ற பாரதிக்கு மாயாவாத்த்திற்கு மகத்தான அதிரடி கொடுத்து மண்ணிலே நிறுத்தும் வல்லமையும் உண்டு.
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம் சொற்பனந்தானோ - பல தோற்ற மயங்கங்களோ? என்று உலுக்கிக் கேட்ட பாரதி.
“காண்ப வெல்லாம் மறையுமென்றால் மறைந்த்தெல்லாம் காண்பமன்றோ?“ என்று எதிர்வாதம் செய்து மடக்கி காண்பதுவே உறதி கண்டோம். காண்பதெல்லாம் உறுதியில்லை. காண்பது சத்தியமாம். இந்தக் காட்சி நித்தியமாம்“ என்று உலக வாழ்வின் நிஜத் தன்மைக்கு உறுதியுரைக்கிறான்.
பாரதியின் வசனத்தேர், உருண்டோடிய எல்லை பெரிது. ஜப்பான் தொழிற் கல்வி, ரஷ்யாவில் விவாக விதிகள், பெல்ஜியத்தில் நடந்த தொழிலாளர் கிளர்ச்சி, அயர்லாந்துக்கு சுதந்திரம் மறுத்த்து குறித்து சீற்றம் என்று தன் சமகாலத்தில் நடந்த சர்வதேச விவகாரங்களில் நுட்பமான ஈடுபாட்டோடு அவன் பார்வை விரிவு பெற்றிருந்த்து.
பெண் விடுதலை, விதவா விவாகம், தேசீயக் கல்வி, சங்கீத விஷயம், நூலாசிரியர் படும்பாடு என்று எத்தனை விஷயங்களை அவன் தொட்டிருக்கிறான்! என்ன கிண்டல் என்ன ஒரு மேதைமை!
எவ்வளவு இதய பரிசுத்தம்! உண்மையின் மீதும் நேர்மையின் அணியிலும் எத்தனை பேரன்பு கொண்டு அவன் நின்றிருக்கிறான்!
பாரதிக்கு அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் அகன்ற கரம் உண்டு. தீமையை, கொடுங்கோன்மையை, சுரண்டலை, அடிமைத்தனத்தை அவன் வரிக்குவரி எதிர்த்திருக்கிறான்.
அச்சத்தையும் அறியாமையையும் சீறிச் சாடியிருக்கிறான். எல்லகளை நிறுவுவன அயே என்பது அவனது உட்கிடக்கையாக இருந்திருக்கும் போலும்.
பழமையும் புதுமையும் வேதாந்த சிந்தனையும் யந்திர நாகரீகமும் சந்திக்கும் முக்கியமான கால கட்டத்தில் பாரதியின் பணி நடந்தது.
இரு துருவங்கள் போன்று எதிர் எதிர் நின்ற சிந்தனைப் போக்குகளுக்கு மத்தியிலே பாலமிடுகின்ற மகத்தான பணி பாரதியின் பணி, அவன் செய்த யாத்திரை பெரியது.
உலகு தழுவிய மனித சமுதாயம் முழுவதற்கும் தன்னை அர்பணித்துக்கொண்ட அந்த மனிதனுக்கு எல்லை எப்படி இருக்க முடியும்? பாரதியிடம் முரண்பாடுகள் காண்போர் அவன் எல்லை கடந்தவன் என்பதை உணர்வது தான் நியாயமாகும்.
அவனது வாக்கின்படி அவன்.
முன்றிலில் ஓடுமோர் வண்டியை போலன்று மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோம்.
பாரதி எல்லைகள் இல்லாத விண்வெளி விமானி.

No comments:
Post a Comment