அமிர்தத் துளிகள்
மகாகவி பாரதியாரைப் பற்றி நிறைய நூல்கள் வெளிவந்துவிட்டன. பல பாராட்டுப் பரவசங்கள், தரிசனங்கள் விமர்சனங்கள், நினைவுக் குறிப்புகள் பல கண்ணோட்டங்கள் என 1982ல் பாரதி நூற்றாண்டின் போதும், அதற்கு முன்பும் பாரதி பற்றிய நூல்கள் கடல்மடை திறந்தாற்போல் வந்து குவிந்தன.
எவ்வளவு நூல்கள் வெளிவந்தாலும் இன்னும் இன்னும் என்று பாரதி பற்றிய ஒரு முழு தரிசனம் கிட்டாத தாகம் புதிய நூல்களுக்கு வழி வகுத்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஆழ்கடல் பற்றிய அறிவியல் ஆய்வுகள் எவ்வளவு வெளிவந்தாலும் ஆழ் கடலின் அதிசயம் எப்படி இன்னும் அதிசயமாகவே இருக்கிறதோ அப்படிப் பட்டவைதான் மகாகவியின் படைப்புகள்!
அந்த படைப்புகளின் இடையே -
“கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்தும் காளிதாசன் கவிதை புனைந்ததும்” என்று பாரதியின் பெருவியப்பு கரை தட்டி நிற்கும் கப்பல் போல இரண்டு வரிகளை உதிர்ந்திருக்கிறது.
அவற்றையே தான் பாரதி பற்றிய எந்த கண்ணோட்டத்திற்கும் திருப்பிக் கூறவேண்டியதாகிறது.
பாரதி என்றொரு மானுடன் வாழ்ந்ததும் அவன் கவி புனைந்ததும் தமிழின் மகத்தான அதிசயங்களாகின்றன.
இந்த அதிசயங்கள், பாரதியின் விஸ்வரூப தரிசனம் காணும் ஆவலை ஏற்படுத்துகின்றன. அந்த ஆவலில் விளைந்த முயற்சிதான் இந்த நூல்.
பாரத நாடு முழுவதும் பாடுகின்ற பாரதியின் புகழை, பக்தர் கூட்டத்தோடு சேர்ந்து, பரவச வெறியில் மீண்டும் ஒருமுறை பாடுவது நமது நோக்கமல்ல.
தலைதெறிக்கிற வேகத்தில் யந்திர மயமாகி வரும் நவீன யுகத்திற்கு பாரதி வழங்கிய மானுட நோக்கம் இன்றியமையாதது.
மகாகவி வெறும் கற்பனைக் கவிஞன் அல்ல, பலராலும் சித்திரித்துக்காட்டுகிறபடி .கஞ்சாவும் அபினும் உட்கொண்ட உணர்ச்சி முறுக்கில் அனல் கக்குகின்ற கவிதைகளை அள்ளிவீசி வீசி, சரக்கு தீர்ந்ததும் சவமாகி நிற்கிற எரிமலை போன்றவனுமல்ல.
மனிதகுலம் உள்ள அளவும் அது நீடித்து நிலைத்து நிற்பதற்கான கருத்துக்களை மகாகவி வழங்கியிருக்கிறார்.
குறிப்பாக பாரத நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் தமிழருக்கும் பாரதி வழங்கியிருக்கிற கருத்துக் கொடை அபாரமானது.
அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ, சந்து முனையில் நின்று கூச்சலிட்டு பெயர் தேடிக்கொள்ளும் முயற்சியாகவோ செய்யும் சிலர் ஆங்கில மோகத்திலும் கம்ப்யூட்டர் மயக்கத்திலும் பித்தம் தலைக்கேறிசெயலிழக்க வைத்திருக்கின்றன.
ஒரு சிலர் நம் மொழியே ஒரு நூற்றாண்டு காலம் நிலைத்திருக்குமா என்று நகரச் சந்தடியில் மேசை முன்பு அமர்ந்து கம்ப்யூட்டர் ஆருடம் கணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
வைரஸ் காய்ச்சல் போல் பரவிவிட்ட இந்த கருத்து நோயும் கூட மகாகவி நிதரிசனமாகக் கண்டதுதான்.
அவர் காலத்திலேயே இத்தகைய பிதற்றல்கள் எழுந்ததும் அதற்கு மகாகவி ஆப்பு அறைந்ததும் நாம் அறிந்த சேதிகளே.
மெல்லத் தமிழினிச் சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்றந்தப் பேதை உரைத்தான். என்று மகாகவி அதற்கு அவர் பாணியில் பதிலளித்திருக்கிறார்.
ஒரு மொழியின் நிலைநிற்பை, நகரங்களோ நகரங்களில் பரவியிருக்கிற யந்திரங்களோ தீர்மானிப்பதில்லை.
அதன் பரந்துவிரிந்த நிலப்பரப்பில் குன்று, மலை, காடு கரை என்று மூலை முடுக்கெல்லாம் வாழ்கிற கோடிக்கணக்கான மக்கள்தான் தீர்மானித்திருக்கிறார்கள்.கணினி மூளைகள் அல்ல .காலத்தின் சூளைகளில் மொழி உருப்பெறுகிறது. வளர்கிறது அதன் விளைவுகளை கவிஞன் தோன்றுகிறான்.

அப்படி தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதற்கும் நாயகமாக நின்ற பாரதி தமிழ்
மொழிக்கு அளித்திருக்கும் புத்துயிர் வேகம் தமிழுக்கோ தமிழருக்கோ எவ்வித
அழிவையும் ஏற்படுத்தாது.
இப்படி இந்திய நாடே அழிந்துவிடும் என்ற மனப்பிரமை எழுந்ததுண்டு, அப்போது தோன்றிய விவேகானந்தருக்கு நவீன இந்தியனை உருவாக்கும் தீர்மானம் இருந்தது.
நமது மகாகவிக்கு நவீன மனிதனை- நவீனத் தமிழனை உருவாக்கும் உத்வேகம் இருந்த்து.
பாரத நாட்டின் பலவீனம், பாரத நாட்டின் அடிமை மனப்பான்மை இவற்றிலிருந்து மறு உயிர் போன்று ஆத்மீகச் சிலிர்ப்புடன் விவேகானந்தர் எப்படி வெளிப்பட்டாரோ -
அதே போன்று தமிழின் தோய்வு, தமிழரின் மந்த நிலை இவற்றைக் கிழித்தெறிந்து மறு உயிர் போன்று வெளிவந்தவர் நம் மகாகவி.
மனிதனுக்கு மரணமில்லை என்று துணிந்து கூறி வாழ்ந்து காட்டி, சிந்தனை வாக்கு செயல் என்று மூவகையாலும் வெளிப்படுத்தியவர் மகாகவி.
அமிர்தத்துளிகள் போன்று அவரது கவிதை, உரை நடை, நண்பரிடையே பேசியபோது சிந்திய வாக்குகள் என அனைத்திலிருந்தும் திரட்டி அவரது முழு உருவைத் தரிசிக்க முயல்வது தான் நமது நோக்கம்.
மன்னர்கள், மகான்கள், மகாவீரர் கலைஞர் எனப் பல தரப்பட்ட மனிதர் ஒரு மொழி பேசும் இனத்தில் வாழ்ந்திருந்தாலும் ஒரு மகாகவி வாழந்த வாழ்வு தரும் ஒளிபோல் பிறர் தரும் ஒளி அந்த இனத்திற்கு உதவுவதில்லை.
ஓயாது ஒழியாது வளர்ந்து கொண்டே செல்லும் வம்சச் சங்கிலிக்கு, ஓரு மகாகவியின் வாக்கும் வாழ்வும் தான் அந்த இனம் வளரும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
அப்படி மனித இனமும், பாரத நாடும், தமிழ் மக்களும் என்றென்றும் மறக்க முடியாத பாதீயப் பண்புகளை ஒருங்கமைத்துக் காண்பதே நமது முயற்சி.
இது விமர்சனமல்ல; இது பாரதியின் வாழ்க்கை வரலாறு அல்ல; பாரதியின் பக்தர் கூட்டத்துப் பனுவலும் அல்ல.
ஒரு மாமனிதன் தன் சிந்தனை, சொல், செயல் இவை மூன்றாலும் மனிதகுலம் முழுவதற்கும் விட்டு விட்டுச் சென்றிருக்கும் உயிலில் அவரது சொத்து விவரம் பற்றிய ஆவணம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.
பாரதியை பற்றிய நூல்களை பாரதி இலக்கியம் என்ற தொகுப்பில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது.
எல்லா மாமனிதர்களுக்கும் உரிய ஒரு விபத்து ஒன்று மகாகவிக்கும் நேரிட்டிருக்கிறது.
தோள் கண்டார், தோளே கண்டார், தாள் கண்டார், தாளே கண்டார் என்ற கூற்றுப்படி பாரதியைக் காண முயல்வோர் கம்யூனிஸ்டு இருந்தால் அவரைப் பலமாக பிடித்து பொதுவுடமைக்கு அவரே முழுவடிவம் என்கின்றனர்.
வேதாந்திகள் பாரதியே வேதாந்தத்தின் சிகரக் கும்பம் என்கின்றனர்.
பக்தர்கள் பாரதியை மகாபக்தனாகவே காண்கின்றனர்.
நாட்டுப்பற்றுடையோரும் மொழிப் பற்றுடையோரும் தம் பார்வைகளுக்கேற்பவே பாரதியை தரிசிக்கின்றனர்.
ஆனால் பாரதி எந்த குறிப்பிட்ட தரிசனங்களுக்கும் மட்டுமே ஏகபோக சொத்தாக நிற்குமளவு வரையறைக்குட்பட்டவரல்ல.
எல்லாப் பண்புகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு மனித குலம் முழுவதற்கும் உரியோனாக இருந்து எங்கும் தேங்கிவிடாமல், இடைவிடாது ஓடும் மகாநதி போலவும்,
வெளியே ஆர்ப்பரித்துக் கொந்தளித்தாலும் அகத்தே யுக யுகங்களாகத் தவம் கலையாத ஆழ்கடல் போலவும் பாரதி வாழ்ந்திருக்கிறார்.
பாரதியின் வாழ்வும் வாக்கும் மாமனிதனாக வாழ்வது எப்படி என்ற ஒழியாத வினாவுக்கே விடையளித்து வந்திருக்கின்றன.
இந்த நூலில் தனித்தனியே அவரது சிறப்புகளை ஒரு மொழி, இனம், நாடு, மனிதகுலம் முழுவதற்கும் இன்னும் கூட உரமாகவும் விதையாகவும் உதவக்கூடிய சிறப்புகளைத் தொகுத்தளிக்க வேண்டியது இப்போது ஒரு அவசியமாகிறது.

No comments:
Post a Comment