மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சுருக்கம்
பாண்டிய
நாட்டின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டைய புரத்தில் 1882 டிசம்பர் 11ல் பாரதி
பிறந்தார். தந்தை சின்னசாமி ஐயர்; தாய் லக்ஷ்மி அம்மாள் இளமையில் வைத்த பெயர்
சுப்பிரமணியன். செல்லமாக சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.
ஐந்து
வயதில் (1887) தாய் காலமானார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் தந்தை மறுமணம் செய்து
கொண்டார். பாரதிக்கு பூணூல் இடப்பட்டது.
அவரது
பதினோராம் வயதில் எட்டையபுரம் மன்னரும், சமஸ்தானப் புலவர்களும் பாரதியின்
கவித்திறனை வியந்து பாரதி என்று பட்டம் சூட்டினர்.
தமது
12ம் வயதில் நெல்லை ஹிந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து,
தமிழ்ப் பண்டிதர்களுடன் சொற்போர் நிகழ்த்தினார்.
தமது
14 வயதில் (1897) ஏழுவயதுச் சிறுமி செல்லம்மாவை ஜூன் 15ல் மணந்தார். பதினாறு வயது முடியுமுன் (ஜூன் 1898) தந்தை மரணமடைந்தார்.
பாரதியின்
அத்தை குப்பம்மாள் ஆதரவில் காசிக்குப்போய் காசி இந்துக்கல்லூரியில் பயின்று
மெட்ரிக்குலேஷன் தேர்ச்சி பெற்றார் (1892-1902)
அதற்குப்பின்
அலகாபாத் சர்வ கலாசாலையில் புகுமுகத் தேர்வில் முதன்மை மாணவனாகத் தேறினார். இங்கே
சமஸ்கிருதமும் இந்தியும் பயின்றார்.
1902ன்
இறுதியில் காசி வந்த எட்டையபுரம் மன்னர் விருப்பத்திற்கேற்ப ஊர் திரும்பி, அரசவைக்
கவிஞராக சிலகாலம் பணியாற்றினார்.
1903ல்
பணியை விட்டு மதுரையிலிருந்து வெளி வந்த ‘விவேகபானு ’ ஏட்டில் தமது முதல் பாடல் ‘தனிமை இரக்கம்’ அச்சேறக் கண்டார்.
1904
செப்டம்பர் முதல் நவம்பர் வரை மதுரை சேதுபடி உயர்நிலைப்பள்ளியில் தற்காலிகமாகத்
தமிழாசிரியர் தொழில் பார்த்தார்.
நவம்பர்
பிற்பகுதியில் ‘சுதேசமித்ரன்’ நாளிதழில் பணிபுரியச் சென்னை வந்தார். ’சக்கரவர்த்தினி’ என்ற மாத
இதழுக்கும் பொறுப்பாசிரியர் ஆனார்.
1905 – 1906 ல் அரசியலில் தீவிரப் பிரவேசம். கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாசபைக்
கூட்டத்திற்குச் சென்றார்.
1907 ஏப்ரல் “இந்தியா“ என்ற வார ஏட்டினை
நிறுவினார். “பாலபாரதம்“ என்ற ஆங்கில இதழுக்கும் பொறுப்பாசிரியரானார்
.
அதே ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரஸ்
மாநாட்டில் கலந்து கொண்டார். திலகர் தலைமையில் தீவிரவாதிகளிடம் பற்றுக்கொண்டார்.
1908 நமது “ஸ்வதேச கீதங்கள்“ பால் தொகுதியை
பாரதியே வெளியிட்டார். இதுதான் நூல் வடிவில் வெளிவந்த முதல் பாரதி படைப்பு
“இந்தியா“ பத்திரிக்கை மீது பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்பு மிகுந்து அதற்காக
தம்மைக் கைதுசெய்யும் வாரண்டு உள்ளது என்று அறிந்து புதுவைக்குத் தப்பிச்
சென்றார்.
1908-1910 “இந்தியா“ பத்திரிக்கையை
புதுச்சேரியிலிருந்து வெளியிட்டார். பிரிட்டிஷ் இந்தியாவில் “இந்தியா“
பத்திரிகைக்குத் தடை. பத்திரிக்கை நின்றுவிட்டது.
இடையில் 1909 பாரதியின் பத்திரிக்கை
முயற்சியகள் அதிக சோதனை பெற்ற ஆண்டு “விஜயா“ தினசரி ஏடு, சூரியோதயம்” வாரப்பதிப்பு, “பால
பாரதம்“ ஆங்கில வாரப்பதிப்பு “கர்மயோகி“ ஆங்கில மாதப் பதிப்பு, எல்லாம் தொடர்ந்து
வெளிவர முடியாத சோதனைக்கு ஆளாயின.
அரவிந்தரைச் சந்தித்ததும் இதே ஆண்டில் தான்.
1910 நவம்பரில் “மாதா மணிவாசகம்“ நூல் வெளியிடப்பட்டது.
1912ல் பகவத் கீதையை தமிழில் மொழி
பெயர்த்தார் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் (முதற்பாகம்)
வெளியிடப்பட்டது.
1913-14ல் சுப்பிரமணிய சிவா நடத்திய
“ஞானபாநு” இதழில்
எழுதினார்.
1918 நவம்பர் 20ல் புதுச்சேரி வாழ்க்கையை
வெறுத்து, பிரிட்டிஷ் எல்லையில் காலடி வைக்கும் போது கடலூர் அருகே பாரதி கைது
செய்யப்பட்டு 34 நாட்கள் ரிமாண்டில் இருந்தபின் விடுதலையானார். மாமனார் வீடு உள்ள
கடையத்திற்குப் புறப்பட்டார்.
1918 முதல்
1920 வரை கடையம் வாசம், வறுமைத் துன்பம்.
1919
மார்ச்சில் சென்னை வருயில் காந்திஜி, ராஜாஜி இருவரையும் சந்தித்தார்.
1920
டிசம்பரில் மீண்டும் சுதேசமித்திரனில் உதவியாசிரியர் பணி ஏற்றார்
.
1921 ஜூலை,
ஆகஸ்டில் திருவல்லிக்கேணி கோயில் யானைக்கு மதம் பிடித்திருப்பது அறியாமல், அதற்கு
வழக்கம் போல் பழம் கொடுக்கச் சென்று அதனால் தூக்கி எறியப்பட்டார். செம்டம்பரில்
வயிற்றுக்கடுப்பு, செப்டம்பர் 11ல் நோய் கடுமையாகி நள்ளிரவு தாண்டி 1-30க்குக்
காலமானார்.
ஆசிரியர்: வையவன்
[அச்சில் வெளிவந்துள்ள நூலின் இணையப்பதிப்பு]
No comments:
Post a Comment