மனமென்னும் பெண்ணே வாழி நீ
மனம் உள்ளவன் மனிதன், மனிதனை மற்ற உயிர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பகுத்தறிவு மனத்திலிருந்தே பிறப்பது.
எளிய மனிதர் முதல் ஆற்றல் வாய்ந்த பெரிய மனிதர் வரை மனத்தின் ஆட்சியின் கீழ் இயங்குபவர்கள் தான்.
சலிப்பது, கொதிப்பது, சீறுவது, உயர்வது, தாழ்வது, சாந்தமுறுவது, குளிர்வது, கனல்வது என்ற இன்னும் பற்பல நிலைகள் கொண்டது மனம். இது சாதாரணமாக அனைவருக்கும் உரியது.
பாரதி போன்ற மகாகவியின் மனம் எத்தகைய கொதி நிலைகளில் சிக்குண்டு தவித்திருக்கும் என்று ஊகிப்பது கடினம்.
எனினும் மனம் பற்றி அவர் எழுதியுள்ள கவிதைகளிலும் கட்டுரைகளிலும் ஆங்காங்கே அவர் தம் மனத்தோடு நிகழ்த்திய துவந்த யுத்தம் புலப்படுகிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தேவாராம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், பட்டினத்தார், தாயுமானவர், வள்ளலார் என பக்தி மார்க்கத்திலோ, ஆத்மீகத் தேட்டத்திலோ திளைத்த கவிஞர்களின் கவிதைகளிலே மனத்தோடு கிளத்தல் என்று கூறப்படும் மனசோடு உரையாடும் கவிதைகள் உண்டு.
ஆயினும் மனத்தையே ஒரு தனிப்பாடல் பொருளாக்கி, மேற்கத்திய அறிவியல் முறைப்படி அதை ஓர் அறுவை மேஜையில் கிடத்தி, அதன் பண்புகளை ஆராயும் போக்குள்ள கவிதை எதுவும் பாரதிக்கு முன் இருந்தில்லை எனலாம்.
தமது “மனப்பெண்“ என்ற கவிதையில் பாரதி மிகவும் ஆழ்ந்தும், வரிவாகவும் மனத்தின் போக்குகள் ஒன்றுவிடாமல் பட்டியலிடுவது போலவும் விவரிக்கிறார்.
ஏனோ பாரதிக்கு மனத்தைப் பெண்ணாகவே மதிக்கத் தோன்றியிருக்கிறது. ஆத்ம விழிப்பு என்ற பண்பு ஆண்மை வடிவமாகவும், அதை எட்டவிடாது செய்யும் மனம் பெண்மை வடிவமாகவும் அவரால் மதிக்கப்பட்டிருக்கலாம்.
மனமெனும் பெண்ணே! வாழி நீகேளாய்
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத துலவுவாய்
என்று மனதை அழைத்துச் செல்ல வந்தவர் எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாக, அடங்காப் பிடாரியாக மனம் படுத்தும் பாட்டை விவரிக்கிறார்.
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
மனம் எப்போதும் புதுமையை விரும்புவது என்று நாமறிவோம். ஒரு புதுமையை மனம் ஏற்குமா? அதை விரும்பும், ஆனால் தன்னகப்படுத்திக் கொள்ளுமா? சந்தேகம் தான். புதுமையைக் கண்டாலே ஒதுக்கித் தள்ளுகிற போக்கும் கூட மனதிற்கு உண்டு. அவ்வாறே பழமையையே என்றும் ருசித்து அதிலேயே மூழ்கித் திளைக்குமா என்றால் அப்படியுமில்லை.
மனதில் பழமைக்கும் புதுமைக்கும் என்றென்றும் ஒரு போராட்டம் தான். இதை அழகாகப் பாரதி படம் பிடிக்கிறார்.
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமைகா ணோமெனப் பொறுமுவாய் சீச்சீ!
என்று சீறுகிறார். அருவெறுப்பில் பிறந்த அந்த “சீச்சீ!“ கூட மனதின் வேறோர் இயல்புக்கு உரியது.
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய்
என்று அழிவுக்கு அஞ்சி அழிந்து, மாண்ட காலத்தில் போய் மீண்டும் மீண்டும் உழலும் பண்பிற்கே அந்த அருவறுப்பை உரியதாக்கினார்.
மனம் என்ற பொருளினைப் பற்றி, அதனோடு பேசுவது போலவும், அதன் வாயிலாக பிறருக்கு உணர்த்துவது போலவும் பாரதி எழுதிய கவிதைகள் ஏழு.
இந்த ஏழு கவிதைகளிலுமே மனம் படுத்தும் பாடும் அதை வெல்ல பாரதி செய்யும் முயற்சிகளும் தெளிவாகத் தெரிகின்றன.
மனத்தின் உளைச்சலே பாரதியின் பிரதான பிரச்சினையாக இருந்திருக்குமோ என்று ஐயம் நமக்கு ஏற்படுதகிறது.
“நெஞ்சோடு சொல்வது“ என்ற கவிதையில் இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே எதற்குமினி யுளைவதிலே பயனொன்றில்லை; என்றவர்-
மனத்திற்குக் கட்டளை என்ற கவிதையில்
“பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல்“ என்னும் போதும் சரி, பாடலின் இறுதி வரிகளில்
“ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியாய்“
எனும் போதும் சரி, மன உறழ்சியோடு அவர் செய்த மல்யுத்தம் தெரிய வருகிறது.
அச்சமும், அதன் பிள்ளையான கவலையும் தான் மன உழற்சிக்குக் காரணங்கள் என்று மகாகவி ஒரு தெளிவுக்கும் வந்து விடுகிறார்.
“தீ வளர்த்திடுவோம்“ பாடலில்
“நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை“-
“அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனை“-
என்று அக்னி பகவானை வாழ்த்தும்போது அவரது இரு முக்கியப் பார்வைகள் வெளிப்படுத்துகின்றன.
அச்சத்தை உள்ளத்தினுள் நுழைய விட்டுவிட்டால் அது மனிதனை என்ன பாடுபடுத்துகின்றது என்பதை நேரடியாகப் பார்த்து மனம் குமுறியவர் பாரதி.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய கால கட்டத்தில், மக்களின் அச்சம் அவரை அவ்வளவு மனம் குமுற வைத்திருக்கிறது என்பது பாரத ஜனங்களின் தற்கால நிலைமை“ என்ற பாடலில் தெளிவாகப் புலப்படுகிறது.
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைக்கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்க ளென்பர் - இந்த
மரத்திலென் பார்; அந்தக் குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார் - மிகத்
துயரப்படுவார் எண்ணிப்பயப்படுவார்
என்றார்.
சிப்பாயைக் கண்டு, ஊர்ச்சேவகனைக் கண்டு, துப்பாக்கி பிடித்த ஒருவன் வெகு தூரத்தில் வருவது கண்டு, மந்திர வாதியைக் கண்டு, அரசியலைக் கண்டு, எவனோ அணிந்திருக்கும் ஆடையைக் கண்டு அச்சம் மக்களை ஆட்டிப் படைப்பதைக் காண பாரதி மனம் வெந்தது.
அதனாலேயே போகின்ற “பாரதத்தை சபித்தல்“ கவிதையில் போகவேண்டிய தீமைகளில் பட்டியலில் ஏழாவதாக
“கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ“ என்றார்.
கவலையின் பிறப்பிடம் அச்சம் என்பதை தீர்மானமாய் அறிந்ததாலேயே
மகாகவி பாரதி தமது அச்சமில்லை பாடலில்
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்
துச்சமாக யெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள் வீசு போதினும்
நந்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
பச்சையூ னியைந்தவேற் படைகள் வந்த போதினும்
என்று அடுக்கிச் சென்றவர் உச்ச கட்டமாக-
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை என்று எழுதினார்.
அச்சமுள்ளவன் எவனையும் பாரதி அறிவாளி என்று மதிக்கத் தயாரில்லை. அவன் எவ்வளவு படித்திருந்தாலும் சரி! இதைத் தனது “தைரியம்“ கட்டுரையில்- “எடுத்ததெற்கெல்லாம் அஞ்சும் இயல்புடைய கோழை ஒருவன் தன்னைப் பல சாஸ்திரங்கள் கற்றவன் என்றும் அறிவாளி யென்றும் சொன்னானால் அவனை நம்பாதே! அவன் முகத்தை நோக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு அவனிடம் பின்வருமாறு சொல்-
“அப்பா, நீ ஏட்டைத் துளைக்கும் ராம பாண பூச்சியைப் போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒருவேளை வாழ்நாளை வீணாக்கியிருக்க்க் கூடும். ஆனால் அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்ய் என்று எழுதிவிட்டு மேலும் தொடர்கிறார்.
ஆம், அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன் தான். விபத்துக்கள் வரும்போது, எவன் உள்ளம் நடுங்காமல் அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ அவனே ஞானி“
பயம் ஒரு பேய் என்பது பாரதியின் கணிப்பு. அஞ்சி ஓடவேண்டிய பேய், இதை “ஜயபேரிகை“ பாடலில் தெளிவாகச் சொன்னார்.
“பயமெனும் பேய்தனை அடித்தோம் - பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்“
பயம் என்ற பேய் ஏன் பிடித்திருக்கிறது? பொய்மை சூழ்ந்ததால்..
பொய்மை ஒரு பாம்பு. அந்த பாம்பு கடித்தால் பயம் என்ற பேய் பிடிக்கிறது.
பொய்மை என்று பாரதி எதைச் சொல்கிறார்?
நாம் பேசும் பொய்யையா? அல்லது இல்லாத ஒன்று இருப்பது போல் தோன்றும் பெய்யையா?
இதற்குப் பதிலையும் அவரே தனது அடங்கி நட என்ற கட்டுரையில் தந்திருக்கிறார்.
“பொய் எது? தன்னை ஸர்வத்திலிருந்தும் பிரிவாகக் காணுதல். உலகமும் தானும் ஒன்றெனக் காண்பதே உண்மை அறிவு.
பயம் தோன்றுவதற்குக் காரணமே பிரித்துக் காணும் கோட்பாடு. இந்த கோட்பாட்டின் பின்னணியில் தான் மகாகவியின் பகைவனுக் கருள்வாய்“ ஒளி தருகிறது.
புகை நடுவினில் தீயிருப்பதையும் சிப்பியிலே நல்ல முத்து விளைவதும், குப்பையிலே குருக்கத்தி வளர்வதும் பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்வதை மகாகவிக்குப் புலப்படுத்துகிறது.
ஆனால் எல்லாம் ஒன்று என்று நிறைவு வந்து விட்டால் மட்டும் போதாது; அதற்கு மாறான கருத்து ஒரு குறுவடிவில் வந்து நுழைந்தாலும் எல்லாம் பாழாகும்.
அதையே தான் “பகைவனுக் கருள்வாய்“ பாடலின் பிற்பகுதியில் தெளிவுறுத்திக் காட்டுகிறார்.
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ள நிறைலாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?- நன்னெஞ்சே
தாழ்வு பிறர்கெண்ணத் தானழி வானென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்கெண்ணத் தானழி வானென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே
இதனையே தெளிவு பாடலில் மகாகவி
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல
நினைத்தபின் புத்தி மயக்கமுண்டோ?
என்று கேட்டார்.
மனத்தோடு நடத்தும் உரையாடலில் எல்லாம் ஒன்று எனக்கண்ட மெய்யறிவு வாய்க்கப் பெற்றால் உள்ளங்குலையாது .வேதனை இல்லை என்றார்.
உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?-என்றும்
“ஆன்ம வொளிக் கடல் மூழ்கித் திளைப்பவர்க்கச்சமு
முண்டோடா?“ என்றும் கேட்டார்.
மனத்தோடு நடத்தும் உரையாடலில் எல்லாம் ஒன்று எனக்கண்ட மெய்யறிவு வாய்க்கப் பெற்றால் உள்ளங்குலையாது வேதனை இல்லை என்றார்.
உள்ள தெலாமோ ருயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைய துண்டோ? - மனமே!
வெள்ள மெனப்மொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா? - என்றும்
“ஆன்ம வொளிக் கடல் மூழ்கித் திளைப்பவர்க்
கச்சமு முண்டோடா?“ என்றும் கேட்டார்.
அச்சத்தைத் தொடர்ந்து கவலை வரும். அதையே பாரதி கவலை - நடந்ததைப்பற்றி, நடக்காததைப் பற்றி,இனி நடக்க விருப்பதைப்பற்றி என்று பல்வேறு வடிவம் எடுக்கும். அதை யுணர்ந்து மகாகவி நெஞ்சொடு சொல்வது கவிதையில் முதலில் நயமாகச் சொல்லிப் பார்க்கிறார்.
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி யிடைநமது வசத்தி லில்லை
மன்னுமொரு தெய்வத்தின் சக்தியாலே
வையத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்
மனமோ, மனமுடைய மனிதர்களோ அதைச் சட்டை செய்வதாகக் காணோம் என்ற சீற்றம் வந்து அதட்டிச் சொல்கிறார்; மனத்திற்கு என்ற கவிதையிலே!
“சென்றதினி மீளாது, மூடரே நீர்
எப்போதுஞ் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும்
குழியில்வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா”
என்ன சொன்னாலும் மனம் பற்றிய பிரச்சனைகளுக்குத் தீர்வில்லை என்ற நிலை தட்டுப்பட்டபோது அதை மாற்றும் உபாயங்களைச் சொல்லவேண்டிய பொறுப்பு தமக்குண்டு என்ற உணர்வு அவருக்கு மேலிட்டிருக்க வேண்டும்.
அவர் சிபாரிசு செய்யும் உபாயங்கள் இரண்டு. ஒன்று பக்தி.
பக்தி என்பதற்கு பாரதி கொண்ட மாற்றுப் பொருள் நம்பிக்கை. தமது நம்பிக்கை கட்டுரையில்
" பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போல, தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்பவேண்டும்."
நெஞ்சோடு சொல்வது கவிதையிலே-
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்
நமோ நமஓம் சக்தி“ யென நலிவாய் நெஞ்சே
பாட்டினிலே சொல்வது மவள் சொல் லாகும்;
பயனின்றி யுரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயமில்லை;
என்றார்.
(பக்தியைப் பற்றி மஹாகவி பார்வையை மற்றொரு முறை விரிவாகக் காணவேண்டியிருப்பதால் அடுத்து தியானத்தைப் பார்ப்போம்)
தியானம் அச்சத்தையும் கவலையையும் அழிக்கும் மஹாசக்தி என்பதில் பாரதிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம் என்ற கட்டுரையில்,
“தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடியே ஆகிறான்“ என்று சுருக்கமாகக் கோடி காட்டுகிறார்.
தியானம் என்பது என்ன? நாம ஜபமா ஒரு மந்திரத்தை இடைவிடாது உச்சரிப்பதா? ஓர் இஷ்ட தெய்வத்தை இடைவிடாது சிந்திப்பதா? அவ்வப்போது தோன்றி மறையும் எண்ணங்களா? அதே கட்டுரையில் பாரதி தெளிவாக்குகிறார்.
ஒருவன் மனத்தில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் தோற்றங்களெல்லாம் தியானமாக மாட்டா!
புதர்க் கூட்டத்தில் தீப்பிடித்தாற்போல மனதிலுள்ள மற்றக் கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம்.
அத்தகைய மூண்டெழும் அக்னி போன்ற விருப்பம் ஏற்படுவது சாத்தியமா? அதற்கு நமக்கு அதிகாரம் உண்டா?
பாரதியே பதிலளிக்கிறார்.
“தனது உள்ளத்தில் இன்ன இன்ன எண்ணங்களைத் தான் வளர விடவேண்டும்; இன்ன இன்ன எண்ணங்களை வளர விடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் - திறமை - ஒவ்வொருவனுக்கும் இயற்கையிலேயே ஏற்பட்டிருக்கிறது."
சரி நமக்கு அந்த அதிகாரமோ திறமையோ உண்டு என நம்பினாலும் அனுபவ பூர்வமாகவே எல்லாம் மாறுபடுகிறதே. மனம் அடிக்கடி புரண்டு விடுகிறதே! இதற்கு பாரதி என்ன சொல்கிறார்?.
“இதை அனுபவித்துக் கொண்டு வரும்போது ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் உண்டாகும். உன்னை எதிர்த்துச் சில விகாரமான சிந்தனைகள் அறிவிற்குள் வந்து நுழைந்துக்கொண்டு, வெளியே பிடித்துத் தள்ளினாலும் போகமாட்டோம் என்று பிடிவாதஞ் செய்யும்."
தம் அனுபவத்தை கொண்டு அறிந்த அத்தகைய சிந்தனைகளை வெல்லும் உபாயத்தையும் மகாகவி வெளியிடுகிறார்.
"அங்ஙனம் சிறுமைக்கு உரிய எண்ணங்கள் உன் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப் படுத்துமானால் நீ அவற்றை வெளியே தள்ளுவதில் நேராக வேலை செய்ய வேண்டாம் நீ அதைத் தள்ள தள்ள, அது அங்கே தான் இருக்கும்.அதற்கு யுக்தி வேறு.
நீ அந்த எண்ணத்திற்கு நேர்மாறான வேறொரு நல்ல சிந்தனையில் அறிவு செலுத்துக.
அப்போது அந்த சிந்தனை வந்து அறிவில் இருந்து கொள்ளும். உன்னைத் தொல்லைப்படுத்திய குட்டிச் சாத்தான் தானாகவே ஓடிப்போய்விடும்."
தியானத்தில் பெருமை குறித்து பாரதி மேலும் பேசுகையில்-
"தெய்வ பக்தி உள்ளவர்களாயினும் நாத்திகர்களாயினும், எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு மார்க்கத்தைச் சேராதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தியானம் அவசியம்.
பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் தியானம் அவசியம்.
பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் நல்ல தியானம உணவைக் காட்டிலும் இன்றியமையாதது.சோற்றை விட்டாலும் விடு.
ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்க்க் கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள் - இவற்றால் அறிவை நிரப்பிக் கொண்ட தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவறவிடாதே.
தியானம் எப்படிச் செய்ய வேண்டும்? எந்த விதத்தில் அது அமைய வேண்டும்?
மகாகவி கூறுவது-
தெய்வபக்தி உடையவர்கள் இஷ்ட தெய்வத்தை அறிவில் நிறுத்தி, அதனிடம் மிகுந்த தாகத்துடனும் உண்மையுடனும் மேற்கூறியவாறு பெருமைகள் உண்டாகுமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும். வாயினால் பழங்கதை ஒன்றை முணுமுணுப்பது அதிகப் பயன் தரமாட்டாது.
உன்னுடைய உள்ளுயிரிலிருந்து அந்தப் பிரார்த்தனை வெளியேற வேண்டும். நீயாக உனது சொந்தக் கருத்துடன் சொந்த வசனங்களில் உயிர் கலந்து தியானம் செய்வதே பயன்படும்.
மனமெனும் பெண்ணை வாழ்த்திய மகாகவி, அதன் சமர்களில் தோற்று அதனோடு என்றும் வணங்கியே வாழும் வாழ்வை விரும்பாதவர். மனம் வென்று, தான் தோற்று விட்டால் பயன் இல்லை என்று உணர்ந்தவர் அதனாலேயே-
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன், நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்;
உன் விழிப் படாமல் என்விழிப்பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனுக் கின்ப மோங்கிடச் செய்வேன்
என்று முத்தாய்ப்பு வைக்கிறார். மனம் பற்றிய எதிர்மறைக் கூற்றாக கவிதையை அமைக்காமல் அதை வசங்காணும் உடன்பாட்டுக் கூற்றாக (Positive) அமைந்ததே மகாகவியின் முத்திரை.

No comments:
Post a Comment